தாய் சீ – சீன தற்காப்புக் கலையை தமிழகத்தில் பரப்பும் மோகனா

சீன தற்காப்புக் கலையான தாய் சியை தமிழகத்தில் பரப்பி வருகிறார் மோகனா.
தாய் சி கலையை முறையாக கற்று இருக்கும் இவர் தமிழகத்தில் இந்தக் கலையில் டிப்ளமா பெற்ற முதல் பெண்.மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட இவரின் கதை அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டக் கூடியது.
இவர் பல போராட்டங்களை கடந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
இவருக்கு கான்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சையின் பின் துப்பரவு தொழிலாளர்கள் வாழ்வு மேம்பாட்டிற்காகவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அறிவியல், அரசியல் என பல்வேறு துறைகளில் 50க்கும் அதிகமான புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.
புற்றுநோய் அறுவைச் சிகிச்சையின் பின் வாழ்வில் முடங்கி விடக்கூடாது என்பதற்காக தாய் சி கலையை கற்றதாக கூறுகிறார் மோகனா.

தியானம் போல ஒரு கலை தாய் சி. அதன் பயிற்சிகளே ஒரு மெல்லிசை போலதான் இருக்கும். இந்தக் கலை என் வாழ்க்கையயே திருப்பிப் போட்டுவிட்டது. உடல்ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் தாய்சி கலை பெரும் மாற்றத்தை என் வாழ்வில் உண்டாக்கிவிட்டது,” என்கிறார் மோகனா.

நன்றி பிபிசி

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *