பெருமையாக இருக்கு… டோனியின் எதிர்காலம்? கோஹ்லியின் அசத்தலான பதில்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, தொடரைக் கைப்பற்றிய இந்திய அணியை நினைத்தால் பெருமையாக இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், 3-0 என்று தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து கோஹ்லி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி, இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி செய்தியாளர்களின் சந்திப்பின் போது, டோனி எதிர்காலம் குறித்து கோஹ்லியிடம் கேட்கப்பட்டது, அதற்கு கோஹ்லி, டோனி இங்கு தான் அறையில் இருக்கிறார், வாங்க, ஒரு ஹலோ சொல்லுங்கள் என்று பதிலளித்தார், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Please follow and like us:
error0