TikTok ஊடாக தீவிரவாதப் பிரசாரம்: அதிரடியாக பல கணக்குகள் நீக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதப் பிரசாரங்கள் சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் TikTok செயலியை குறித்த தீவிரவாத அமைப்பு தமது பிரசார ஊடாகமாகப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து தீவிரவாதப் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட சுமார் இருபதிற்கும் மேற்பட்ட TikTok கணக்குகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சில கணக்குகள் 1,000 வரையான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்ததாகவும் வால் ஸ்ட்ரீட் சுட்டிக்காட்டியுள்ளது. இக் கணக்குகள் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான பாடல்கள், போராளிகளின் காட்சிகள் மற்றும் சடலங்கள் என்பனவற்றினை பகிர்ந்து அவற்றின் மூலம் ஆதரவு திரட்ட முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:
error0