அக்டோபர் 22-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர் பார்த்த பண உதவி கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவல கத்தில் வழக்கமான நிலைமையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்ப னையும் லாபமும் அதிகரிக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

அதிகாரிகளின் சந்திப்பும், அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களும், அவர்களுக் காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட் டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலரைச் சந்திக்க வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனையும் உதவியும் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர் பார்த்தபடியே இருக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.சகோதரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணை யுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்னை கள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிகளில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபா ரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

மகரராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடவும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற் றத்துக்கு உதவுவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை களைச் சமாளிப்பீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மாலையில் நண்பர் களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

மீனராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனு சரணையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

Please follow and like us:
error0