ஓநாய் சந்திர கிரகணம் : வெற்றுகண்ணால் பார்க்க முடியுமா?

2020ஆம் ஆண்டில் மொத்தம் 2 சூரிய கிரகணமும் 4 சந்திரகிரகணமும் நிகழ உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அதில் முதல் சந்திரகிரகணம் நாளை ஜனவரி 10ஆம் ( நாளை) நிகழ்கிறது.

இனி நிகழ இருப்பது, ஓநாய் சந்திர கிரகணம் “Wolf Moon Eclipse” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரகிரகணம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்தில் தொடங்குகிறது.

11ஆம் திகதி அதிகாலை 12 மணி 40 நிமிடம் கிரகணத்தின் மத்திமகாலமாகும். கிரகணம் 11ஆம் திகதி அதிகாலை 2.42 மணிக்கு முடிகிறது.

இந்த 4 மணி நேர இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 90 சதவீத நிலவின் பரப்பு பூமியின் நிழலால் மறைக்கபட்டு, வெளிவட்டப் பாதை மட்டும் நிழல் போலத் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகணம் இந்தியாவை தவிர ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவின் சில நாடுகளிலும், ஆப்ரிக்கா, வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.

மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

மேலும் 2020ஆம் ஆண்டில் மொத்தம் 2 சூரிய கிரகணமும் 4 சந்திரகிரகணமும் நிகழ உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இதில் இரண்டாவதாக சந்திரகிரணம் ஜூன் 5, 2020-இதுவும் நிழல் போன்ற கிரகணமாகத் தான் இருக்கும். இது தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.

மூன்றாவது ஜூலை 5, 2020-ல் தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும். இதை அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும்.

நான்காவது சந்திரகிரணம் நவம்பர் 30 2020-ல் வரும் கிரகணம். இது அமெரிக்கா,வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *