பிரபல ஒன்லைன் கல்விச் சேவையில் பல மில்லியன் டொலர் முதலீடு செய்யும் Tiger Global Management

இந்திய பாடத்துறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Byju’s ஒன்லைன் ஆப்பிளிக்கேஷன் ஆனது இன்று உலகத்தரத்திற்கு உயர்ந்துள்ளமை தெரிந்ததே.

வால்ட் டிஸ்னியுடன் இணைந்தே இம் முயற்சி சாத்தியமானது.

இப்படியிருக்கையில் Tiger Global Management எனும் நிறுவனமும் சுமார் 200 மில்லியன் டொலர்களை Byju’s நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்த தகவலை Byju’s நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Byju Raveendran தெரிவித்துள்ளார்.

Tiger Global Management நிறுவனமானது பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடுகளை செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையிலேயே தற்போது Byju’s நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இதேவேளை கடந்த 12 மாதங்களில் 42 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களையும், 3 மில்லியன் சந்தாதாரர்களையும் Byju’s நிறுவனம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *