“முதலில் மோடி ஆவணங்களை காட்டட்டும்”- பிரபல இயக்குனர் ட்வீட்!

நடிகர் விஜய்சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட்டின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப். இவர் இந்தியாவில் அண்மையில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இது சம்மந்தமாக ட்விட்டரில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப்,  “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பிரதமரின், பொலிட்டிகல் சயின்ஸ் பட்டத்தை நான் காண விரும்புகிறேன். முதலில் பிரதமர் மோடி கல்வி அறிவுள்ளவர் என்பதை நிரூப்பிக்கட்டும், பின்னர் பேசுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து , “முதலில் பிரதமர் மோடிம்  அவருடைய பிறப்பு சான்றிதழையும், அவரது பெற்றோரின் ஆவணங்களையும் நாட்டிற்கு காட்டட்டும், அதன்பின் குடிமகன்களின் ஆவணங்களை அவர்கள் பார்க்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *