இன்றைய இராசி பலன்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள், அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் திருப் திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்: எதிர்ப்புக்கள் அனைத்தையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சொத்துகள் வாங்குவதும் விற்பதும் லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்க ளுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் சாதாரணமாக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: சில காரியங்களை முடிக்க அலைந்து திரிய வேண்டியிருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

விருச்சிகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களுக்காக மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் வேலைகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு:  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள் .

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கமும், அழுத்தமும் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி கூறும் குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர் பாலினத்தவரின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புது உத்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.


Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *