ஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை தொடர்பில் வெளி யான தகவல்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ஹுவாவி கடந்த வருடம் Mate X எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

வழமையான கைப்பேசிகளை விடவும் வித்தியாசமான வடிவமைப்பு என்பதால் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றிருந்தது.

எனினும் இதன் விலையானது ஏனைய கைப்பேசிகளை விடவும் அதிகமாகவே காணப்பட்டது. அதாவது 2,400 டொலர்களாக காணப்பட்டது. இந்நிலையில் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மாதம் தோறும் 100,000 கைப்பேசிகள் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாம்சுங் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய கைப்பேசியினை கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்தது.

இவற்றில் ஒரு மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இவ் வருடம் இடம்பெற்ற CES நிகழ்வில் 400,000 முதல் 500,000 வரையான கைப்பேசிகளே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *