ரயில்களில் விரைவில் புதிய வசதி: எங்கு தெரியுமா?

இந்தியாவில் ரயில்களில் Wi-Fi வசதி ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கு இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதன்படி Content on Demand (CoD) சேவையின் ஊடாக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் உட்பட மேலும் பலவற்றினை வழங்கவுள்ளது.

இச் சேவையினை பயணிகள் கட்டணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டிலிருந்து இத் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தேவையான உள்ளடக்கங்களை பல்வேறுபட்ட மொழிகளிலும் RailTel நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *