`தோனி பெயர் மிஸ்ஸிங்; டாப் கிரேடில் கோலி, ரோஹித் ஷர்மா!’ – பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல்

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின்னர், பல்வேறு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றும், வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை. இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலோ தோனி தரப்பிலோ எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின்கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி, ஏ பிளஸ் கிரேடில் இருப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடியும் ஏ கிரேடு ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பி பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடியும் சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *