“விரைவில் நற்செய்தி வரும்!”- நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த பாரதிராஜா – இளையராஜா சந்திப்பு

“இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது… என் தேனியில்” என்ற கேப்ஷனோடு போட்டோவை ட்வீட் செய்துள்ளார், இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் பல மெகா ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. 1977-ல் வெளியான ’16 வயதினிலே’ முதல் 1992-ல் வெளியான ‘நாடோடி தென்றல்’ வரை பாரதிராஜாவின் பல படங்களுக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்தப் படத்திற்குப் பிறகு, சில காரணங்களால் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே நண்பர்களாக இருந்தனர். இவர்களது கூட்டணியில் உருவான படங்களுக்கும் பாடல்களுக்கும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *