மோடி வீட்டில் அவமானப்படுத்தப்பட்டோம்! பாடகர் எஸ்பிபி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி சினிமா துறை பிரபலங்களை சந்திப்பதற்காக தன்னுடைய வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக், அமீர் கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடி வீட்டுக்குள் செல்லும்போதே இவரது செல்போனை வாங்கிக்கொண்டு ஒரு டோக்கன் கொடுத்துள்ளனர்.

ஆனால் வீட்டுக்குள் போய் பார்த்தால் சில நட்சத்திரங்கள் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

இப்படி பாகுபாடு காட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம் என எஸ்பிபி பேஸ்புக்கில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *