பாரிய அழிவை நோக்கி சமுத்திரம் .!

காலநிலை மாற்றம் காரணமாக முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சமுத்திரம் பாரிய அழிவை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதுடன், அதிக குளிர் நிலவும் நாடுகளில் பனி அசாதாரணமான முறையில் உருகுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் தமது இருப்பிடத்தினை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், அபூர்வமான உயிரினங்களும் அருகிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலப்பரப்புக்களில் நிரந்தர பனி உறையும் தன்மை ஏற்பட்டுள்ளதனால், கரியமில வாயுவின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரியமில வாயுவின் தன்மையை உலகளாவிய மக்கள் மட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த நூற்றாண்டு நிறைவின் போது பூமியின் வெப்பம் 1.5 செல்ஷியசினால் அதிகரிக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகளை தற்போதே கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *