ஞாபக சக்தியை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய வழிமுறை

மனித மூளைக்கு மின் சமிக்ஞைகள் ஊடாகவே தகவல்கள் பரிமாற்றப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.இதனால் மின் இரசாயனவியல் கணினிகள் என மூளைகள் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இப்படியிருக்கையில் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான புதிய யுக்தி ஒன்றினை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அதாவது வானொலிப் பெட்டிகளில் அலவரிசைகளை துல்லியமாக சரிசெய்யும்போது அவற்றிலிருந்து துல்லியமான ஒலி கிடைக்கப்பெறுகின்றது.

இதேபோன்று மூளையில் காணப்படும் மின் சமிக்ஞைகளினை சரியான அலவரிசையில் செயற்பட வைப்பதன் ஊடாக ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.இவ்வாறு செய்வதனால் மூளையின் ஆழ் பகுதி தூண்டப்பட்டு வினைத்திறனாக செயற்பட ஆரம்பிக்கின்றது.இதற்காக சிறிய அளவு மின் அழுத்தத்தினை மூளைக்கு பிரயோகிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *