இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து பதிலடி

2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து அணி தக்க பதிலடி கொடுத்தது.பதிவு: நவம்பர் 04,  2019 04:41 AMவெலிங்டன்,

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. மார்ட்டின் கப்தில் 41 ரன்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் 42 ரன்களும் (22 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். இங்கிலாந்தின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் 3 கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தார்.

அடுத்து களம் கண்ட இங்கிலாந்து 19.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 39 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 36 ரன்களும், கேப்டன் மோர்கன் 32 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் வின்ஸ் (1 ரன்) உள்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. நியூசிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியோடு, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நெல்சனில் நாளை நடக்கிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *