படத்தில் வில்லன் ஆனால் நிஜத்தில் 100 பேரின் பசியை போக்கி ஹீரோவான நடிகர்!

அஜித், கார்த்தி, ஆர்யா, விஷால் ஆகியோர் வில்லனாக பல படங்களில் நடித்த நடிகர் ராஜசிம்மன் நிஜத்தில் 100 பேரின் பசியை போக்கி ஹீரோவாகியுள்ளார்.

படத்தில் வில்லன் ஆனால் நிஜத்தில் 100 பேரின் பசியை போக்கி ஹீரோவான நடிகர்!பெரும்பாலான மாஸ் நடிகர்கள் பெரும்பாலும், சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், அஜித், சூர்யா, கார்த்தி, ஜிவி பிரகாஷ், விஜய் என்று மாஸ் நடிகர்களை குறிப்பிடலாம். இவர்களையும் தாண்டி ஒரு வில்லன் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், விஷால், அஜித், கார்த்தி என்று மாஸ் நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ராஜசிம்மன். படங்களிலும் வில்லனாலும், நிஜத்தில் ஹீரோவாகவே திகழ்கிறார். ஆம், நாம் அன்னதானம் கொடுப்பது என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு இல்லையென்றால் 2 நாளைக்குகொடுப்போம். ஆனால், இதனையே தனது தினந்தோறும் பணியாகவே ராஜசிம்மன் செய்து வருகிறார். படங்களில் நடிப்பதைத் தவிர தன்னால் முடிந்த அளவிற்கு சமையல் செய்து தினமும் 100 பேரின் பசியை போக்கி வருகிறார்.

ராஜசிம்மன் வில்லன் நடிகராகவும் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர், என்னை அறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன், மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பொதுவாக படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்குதான் சம்பளம் அதிகமாக கொடுக்கப்படும். இவர்களைத் தவிர லோக்கல் வில்லன்கள் என்றால், சம்பளம் குறைவுதான்.

அப்படித்தான் ராஜசிம்மனுக்கும் குறைவான சம்பளம்தான். ஆனால், அதனையெல்லாம் பொருட்டாவே நினைக்காமல், தன்னால், முடிந்தளவிற்கு பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு தானே சமைத்து அவர்களுக்கு பரிமாறி வருகிறார். இதனை தனது அன்றாட சேவையாகவும் கருதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *