டோனியை போன்று காப்பி அடிக்க நினைக்காதீங்க… இந்திய வீரரை விளாசிய அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கில்கிறிஸ்ட், இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பாண்ட், டோனியை காப்பி அடிக்க நினைக்க வேண்டாம் என்று

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கில்கிறிஸ்ட், இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பாண்ட், டோனியை காப்பி அடிக்க நினைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.

ஆனால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி எந்த வித தொடரிலும் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பாண்ட்டிற்கு தேர்வு குழுவினர் அதிக வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு சில முடிவுகள், ரிஷப் பாண்ட் அப்படியே டோனியை போன்றே செய்வது போன்று செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பாண்ட்டை டோனி போன்று செய்ய நினைத்து, பாண்ட் ஏன் இப்படி அசிங்கப்பட வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு சில முடிவுகள், ரிஷப் பாண்ட் அப்படியே டோனியை போன்றே செய்வது போன்று செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பாண்ட்டை டோனி போன்று செய்ய நினைத்து, பாண்ட் ஏன் இப்படி அசிங்கப்பட வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர்

அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். ஒரு நாள் யாரேனும் ஒருவர் அந்த உச்சத்தை எட்டக்கூடும். ஆனால், அவ்வளவு எளிதில் அது நடக்க வாய்ப்பில்லை. ரிஷப் பாண்ட் திறமை வாய்ந்த இளம் வீரராக உள்ளார்.

தொடக்கத்திலே அவர் மீது அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் டோனியை போல் விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது.

டோனியின் கீப்பிங் ஸ்டையிலை காப்பி அடிக்க வேண்டாம். அவரைப் போல் இருக்க நினைக்க வேண்டாம். டோனியை போல் இருப்பதை காட்டிலும், உங்களைப் போல் நீங்கள் இருங்கள். டோனியிடம் இருந்து என்னவெல்லாம் முடியுமோ அதனையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் கொடுக்க முடிந்ததை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *