விஜய் செய்த 4வது சாதனை- தெறி மாஸ் செய்யும் தளபதி

விஜய்யின் பிகில் படம் தான் இப்போது எல்லா இடங்களிலும் அதிக வசூல் செய்யும் படம். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா என வசூல் சாதனை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமே படம் முதல் வார முடிவில் ரூ. 100 கோடி வசூலித்து விட்டது. அடுத்தடுத்த வாரங்களில் எந்த ஒரு பெரிய படமும் வராததால் தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி படங்கள் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

பிகில் படம் 11 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 11.08 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் 4வது முறையாக சென்னையில் ரூ. 11 கோடிக்கு மேல் அவரது படங்கள் வசூலித்துள்ளது.

இதற்கு முன் தெறி, மெர்சல், சர்கார் படங்கள் சென்னையில் ரூ. 11 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *