ஷமி-அஸ்வின் பந்து வீச்சில் தினறிச் சரிந்த வங்கதேசம்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ம் திகதி இந்தூர் மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மறுநாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி இந்திய அணி, இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட்டு இழந்து 493 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3வது நாள் இன்று போட்டி தொடங்கும் முன்பே டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. மயங்க் அகர்வால் (243), ரோகித் சர்மா (6), புஜாரா (54), கோஹ்லி (0), ரஹானே (86), ஜடேஜா (60)*, சாஹா (12), உமேஷ் யாதவ் (25)* ஓட்டங்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் ஜாயெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்படி, 343 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 213 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரஹீம் 64 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் அசத்தலாக பந்து வீசி ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *