
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் தல அஜித் ஒருவராவார். இவரது படங்களிற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும் ஆர்ப்பரிப்பும் தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் ஒரு தடம்.
இந் நிலையில் நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகின்றமை அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் இந்த திரைப்படம் பற்றிய எவ்வித மேலதிக தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இப்படம் அஜித் – போனிகபூர் கூட்டணியில் உருவாகி வருவதனால் ரசிகர்கள் போனிகபூரிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.