கமலியாக மாறிய ஆனந்தி நாளை வெளியாகும் கமலி நடுக்காவேரி டீஸர்

‘Ee Rojullo’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தி , 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடத்தில் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கயல் படத்தில் நடித்ததற்காகத் தமிழக அரசு வழங்கும் மாநில சிறப்பு விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார் .

பெரிய அளவில் முன்னணி நடிகை என்ற இடத்தை பெறவில்லை என்றாலும் சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரைத் தக்கவைத்து வருகின்றார். டைட்டானிக், எங்கே அந்த வான், ஏஞ்சல், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap