கவினுடன் பயணிக்கும் அம்ரிதா –

சின்ன திரை நாடகங்களில் நடிக்கும்போது பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புடன் வலம்வந்தவர் தான் நடிகர் கவின். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கான விசிறிகள் அளவு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இலங்கை தமிழச்சி லாஸ்லியா மீது காதல் கொண்டார். பிக் பாசில் இவர்களின் காதல் கதை ஒரு தனிக்கதை

நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக வலம்வந்த கவின் தற்போது மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார். அதற்கு பின் தற்போது லாஸ்லியா கதாநாயகியாக மாற, ஏற்கனவே இந்த படத்தில் கவினுடன் கரம் கோர்க்கிறார் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர்.

EKAA என்டர்டைன்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் வழங்கும் இந்த படத்தினை இயக்குகிறார் வினீத் வரப்பரசாத், ஹெபிஜி இந்த படத்தைத் தயாரித்து வருகிறார். வெகு நாட்கள் கழித்துக் களமிறங்கும் கவினுக்கு இது முக்கியமான திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. “இந்த லிஃப்ட் நிறையக் கனவுகளுடன் இந்த படத்திற்காக ஆர்வத்துடன் பணியாற்றிய அனைத்து ஆத்மாக்களையும் உயர்த்தும் என்று நம்புகிறேன்” என்று இந்த படத்தின் நாயகி அம்ரிதா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap