கொரோணா அச்சுறுத்தலால் இந்தியா தென்னாபிரிக்க தொடர் இரத்து

இந்தியா தென்னாபிரிக்கா இடையே ஒருநாள் போட்டிகள் மூன்று போட்டிகள் நடக்க இருந்தது. அதில் ஒரு போட்டி நடந்துவிட்டது. அடுத்த 2 போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் இரண்டு நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு போவதே ஆகும்.

தென்னாபிரிக்க அணி டெல்லிக்குச் சென்று அங்கு கிடைக்கும் முதல் விமானத்தின் மூலம் நாடு திரும்ப உள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 80 ற்கு மேற்பட்ட கொரோணா தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டு உள்ளார்கள்.

சர்வதேச அளவில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோணா நோயினால் இறந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap