ஆஸ்திரேலிரேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி போது தனக்கு தொண்டை வலி இருப்பதாக சொன்ன நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வலது கை வீரரான இவர் போட்டி முடிந்தவுடன் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைகளுக்கு பிறகு குறைந்தது 24 மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
“பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளுக்கு இணங்க, முதல் ஒருநாள் முடிவில் தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்த 24 மணிநேரத்துக்கு ஹோட்டலில் லோக்கி பெர்குசன் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்”
71 ஓட்டத்தால் தோல்வியை தழுவியது நியூசிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.