யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம் ஆகியுள்ளன.
தும்புத் தொழிற்சாலை க்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோர் தீ வைத்ததால் அதன் கங்குகள்பறந்துவந்து தும்பு தொழிற்சாலைக்கு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை மீது விழுந்து தீ பற்றிக்கொண்டது
இத் தீயினை அயலிலுள்ள கிராமத்தவர்கள் மற்றும் இராணுவத்தினர்தென்மராட்சி தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து இதனை கட்டுப்படுத்தினர்.