அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று இடம்றெவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன!

இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்றெவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழு நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் கூடவுள்ள மக்கள் தொகையை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இவ்வாறு ஒத்திவைக்கப்படும் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனினும் அவசர மற்றும் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தமது தரப்பினரின் வருகை முக்கியமாக தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களை நீதிமன்றங்களுக்கு வருமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றங்களின் சிறிய சிறை அறைகளில் தேவையற்ற நெரிசல் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap