தற்போது உலகம் முழுவதும் கொரோணா பரவி வருகின்றது . இன்று வரை உலகம் முழுவதிலும் 6000 த்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் . இந்தியாவில் இதுவரை 100 ற்கு மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசும் மானில அரசுகளும் இந் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தவண்ணமுள்ளனர்.
தமிழகத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடுமையான சூழ்நிலையில் மக்கள் வெளியில் செல்லாமலே தங்களது உடலை சீராக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய சில உடற்பயிற்சிகளை பிரபல நடிகை கத்ரீனா கெய்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
கொரோனா காரணமாக வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை படப்பிடிப்புகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.