கொரோணா வைரஸ் எத்தனை நாட்கள் உடலில் வாழும் சீனா தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

கொரோனா வைரசின் தாக்கம் மற்றும் அதன் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவலை இன்று வெளியிட்டுள்ளனர். சீனாவின் வுகானில் உருப்பெற்ற கொரோனா தற்போது சர்வதேச நாடுகளை துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. எனினும் சீனாவிற்குள் அதன் தாக்கம் குறைந்து செல்கிறது.

ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும் என்றும் சீன மருத்துவர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். தற்போது இலங்கையிலும் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டு போகிறது . இதுவரை ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap