நயன்தாராவுடன் டாக்டர் நடிகர்

விக்னேஷ் சிவனின் ரவுடி பிகர்ச்ஸ் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’, ‘காதல் 2 கல்யாணம்’ ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

அஞ்சாதே”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, ‘கோ’ ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடன் பெரும் ஆதரவைப் பெற்றவர் நடிகர் அஜ்மல். ஒரு மருத்துவரும் நடிகருமான அஜ்மல் நயன்தாரவுன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

“நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ள நிலையில், கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு நேற்றுமுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap