தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடிக்கவுள்ளதாகப் பலருடைய பெயர்கள் அடிபட்டன. இறுதியாக, போதை ஏறிய புத்தி மாதிரி படத்தின் மூலம் அறிமுகமாகி துஷாரா நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்தே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
ர்யாவுடன் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.