என்வாழ்க்கை சாவித்திரி மாதிரி மாறியிருக்கும். தனது முன்னாள் காதலர் தொடர்பாக சமந்தா மனம் திறக்கின்றார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. அவர் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, பெண்களை மையமாக வைத்து அஸ்வின் சரவணன் இயக்கவுள்ள படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாகவும் மற்றும் ‘ஃபேமிலி மேன் 2’ என்ற வலைத் தொடரிலும் நடிக்கிறார்.

சமந்தா மற்றும் நடிகர் சித்தார்த் கடந்த காலங்களில் உறவிலிருந்தனர் என்பது எல்லோருக்கும் தெரியும். சில காரணங்களால், அவர்களின் உறவு அடுத்தகட்டத்துக்குச் செல்லாமல், பிரிந்தனர். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது பலருக்குத் தெரியாது, மேலும் அதைப் பற்றி அவர்கள் ஏதும் பேசவில்லை.

இறுதியாக, சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முந்தைய உறவு கசப்பானது என்று கூறியுள்ளார். அவர் அந்த பேட்டியின்போது “நடிகை சாவித்திரியைப் போலவே எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் இத்தகைய நெருக்கடியில் சிக்கியிருப்பேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நான் அதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன், உறவிலிருந்து வெளியேறினேன். இது மோசமாக முடிவடையும் என்று நான் உணர்ந்தபோது எடுத்த முடிவு. என் வாழ்க்கையில் நாக சைதன்யா போன்ற ஒருவரை நான் பெற்றிருக்கிறேன். He is a gem of everything” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap