2009ம் ஆண்டு கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ராகுல் ப்ரீத் சிங். வெகு விரைவிலேயே இவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். 2011ம் ஆண்டு ஆர்.என். சரண் நடிப்பில் வெளியான யுவன் என்ற படத்தில் இவர் அறிமுகமானார். 2014ம் ஆண்டு தமிழில் வெளியான என்னமோ ஏதோ படத்திற்குப் பிறகு இவர் தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கு திரையுலகில் படு பிஸியாக இருந்த இவர் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் படத்தில் நடித்தார்
அதே 2017ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு, இன்றளவும் நல்ல படம் என்று போற்றப்படும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து நல்ல பெயரைப் பெற்றார் ராகுல் ப்ரீத் சிங்.
தென் இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக வளம் வரும் ப்ரீத் சிங் கவற்சியான புகைப்படங்களை வெளியயிடுவது வளமை. அந்தப் படத்துக்கு ஆபாசமாக சிலர் திட்டியதை அடுத்து அதற்கான பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபோன்ற வேலைகளைச் செய்பவர்கள் இணையத்தில் போலி கணக்குகளுக்குப் பின்னல் ஒளிந்து கொண்டு உண்மையான முகத்தை வெளியிடத் துணிச்சல் இல்லாத கோழைகள் என்றும். அவர்கள் தான் இதுபோன்ற கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்