விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக வெய்ட்டிங். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா ஜெரமியா, ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ‘தளபதி65′ படத்துக்காக விஜயின் கால் ஷீட்டை பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ். அதையடுத்து அதற்கு ஏற்ற மாஸ் கதையை எதிர்பார்த்து வெற்றிமாறன், மகிழ் திருமேனி, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜா, சுதா கொங்கரா எனப் பல இயக்குநர்களிடம் கதை கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், விரைவில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டோலிவுட் திரைத்துறையில் கலக்கிவரும் எஸ்.எஸ் தமன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது இசையில் சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் ‘அல வைகுந்தபுரம்லோ’ படப் பாடல்கள் வைரல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.