பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று (19) அதிகாலை 4 முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டிற்கு வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயண வழிமாற்ற விமானங்களுக்கு தடை விதிக்கப்படாதபோதிலும், குறித்த விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலிருந்து வௌியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சரக்கு விமானங்களின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap