பா. ரஞ்சித் அவர்கள் மீண்டும் தந்தையானார்.

நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள படங்களை மக்களுக்கி வழங்கியவர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பெயரை எடுத்தவர் திரு பா இரஞ்சித் அவர்கள்.

அட்ட கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா. ரஞ்சித், அதையடுத்து மெட்ராஸ், கபாலி, காலா எனத் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்து வருகிறார். தற்போது ஆர்யா நடிப்பில் ‘சல்பேட்டா’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது, இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களின் இந்த இரண்டாவது குழந்தைக்கு ‘மிளிரன்’ எனப் பெயர் வைத்துள்ளனர். தற்போது அவர் தன் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த தம்பதிக்கு முன்னதாக ‘மகிழினி’ எனும் பெண் குழந்தை உள்ளார்.

குழந்தை பிறந்தது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் திரு ரஞ்சித் அவர்கள் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap