தற்போது நிலவும் அசாதாரண சூழலில் எங்கு திரும்பினாலும் நாம் கேட்கும் ஒரே செய்தி கொரோனா. தனிப்பட்ட ஒரு நாடு என்று இல்லாமல் இந்த ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் தான் இந்த கொரோனா நோய்த் தொற்று. மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றபோதும், தினமும் மக்கள் நம்பிக்கையோடு முறையான சுகாதாரத்தை கடைப்பிடித்தால் நிச்சயம் இந்த நோய் வராமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து.
இந்த நிமிடம் வரை இந்த நோய்க்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றபோதும் பல தற்காப்பு நடவடிக்கைகளை அரசும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போது இணையதளத்தின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். அண்மைக் காலமாகத் திரை பிரபலங்கள் பலர் இந்த கொரோனா நோய் குறித்த பல அறிவுரைகளையும், பொதுமக்களாகிய அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாயாகிவிட்ட பிரபல நடிகை சமீரா ரெட்டி ஒரு தாயக இந்த கடுமையான நேரத்தில் தங்களது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.