தெலுங்கில் கடத்த 2000ம் ஆண்டு வெளியான ஹனுமான், ஜங்ஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி அதன் பிறகு முன்னணி நடிகையாக தங்களை உயர்த்திக்கொண்டு நடிகைகள் பலர். அதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முதல் முறையை சிவகார்த்திகேயன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகமானார்.
தனது அமைதியான மற்றும் இயல்பான நடிப்பால் விரைவில் சிறந்த நடிகையாக மாறினார் ஸ்ரீ திவ்யா.
ஜீவா, காக்கி சட்டை, மாவீரன் கிட்டு போன்ற நல்ல படங்களில் நடித்து நடிப்புலகில் தனது அந்தஸ்தையும் அவர் உயர்த்திக்கொண்டார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவை திற” படத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று விலகி ஓய்வெடுத்த ஸ்ரீ திவ்யா தற்போது மீண்டும் நடிப்புலகில் கால்பதித்துள்ளார்
பிரபல நடிகர் அதர்வா நடிக்கும் ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற படத்தில் அவருடன் கைகோர்க்கிறார் ஸ்ரீ திவ்யா, 5 ஆண்டுகளுக்கு முன்பு 2015ம் ஆண்டு வெளியான ஈட்டி படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது