ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ரானா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் தமன்னா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்து, இந்தியா சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த திரைப்படம் தான் பாகுபலி. இந்தப்பட் வியாபார ரீதியில் சக்கைபோடு போட்டது.
தற்போது அந்த திரைப்படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த திரைப்படம் சுமார் 830 கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்துள்ளது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வரும் இந்தத் திரைப்படம், இன்றுவரை RRR என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் மேலும் பல வர்த்தக சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அண்மையில் ஒப்பந்தமானார்
ஆனால் இப்போது கொரோனா போன்ற பிரச்சனைகளால் அடுத்தடுத்து படப்பிடிப்பு தள்ளிப்போவதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்படுவதாகவும், அதனால் இந்த படத்திலிருந்து அலியா பட் விலகி இருப்பதாகவும் சினிமா வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.