எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் டிராமாவான ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவைல் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வெளியான ‘கும்கி’ திரைப்படமும் பெரும் புகழை அவருக்குக் கொடுத்தது. இந்த இரண்டு படங்களுக்குமே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
குறிப்பிட் காலம் இவரிற்கான படவாய்ப்புகள் குறைவானதாகவே இருந்தது.
அதையடுத்து குட்டிப் புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் நடித்து வெளியான ‘றெக்க’ திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறாததை அடுத்து, அவர் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து லக்ஷ்மி மேனன் ரீ- எண்டரி கொடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். இப்படம் செண்டிமண்ட் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.