போருக்கு புறப்படும் இராணுவ வீரனின் மனநிலை தற்பொழுது நமக்கும்! தாதி ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு

வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்பும் பொழுது, போருக்கு புறப்படும் ஒரு ஒரு இராணுவ வீரனின் மனநிலையில்தான் கிளம்புகிறோம்.

இதே ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு திரும்புவோமா என்பது குறித்து எந்த உறுதியும் இல்லை.

உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க் உள்ள வேலைதான், தெரிந்தே தான் இந்த வேலைக்கு வருகிறோம்.

உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு போகாதே என உறவினர்கள் சொல்லும் போது மனசு கேட்க மாட்டேங்கிறது.

நாங்கள் இப்படித்தான், பணியின் மீதான காதல்.. காதல் மட்டுமே எங்கள் மனதில்…என தாதி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap