மீடியா என்ற துறைக்குள் நுழைந்துவிட்டாலே அந்த நபர் பொங்கி வரும் பாராட்டுகளையும், அதே சமயம் அவர்களுக்கு எதிராக எழும் சின்னஞ்சிறு கேலிகளையும் எதிர்கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சின்னதிரையில் பல ஆண்டுகளாகப் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வந்து செல்லும் நிலையில் தனக்கென தனி இடம் பிடித்து தனித்துவமாக விளங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலர். அதில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா, சென்னையில் பிறந்த இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி.
மீடியா மீது இவருக்கிருந்த ஈர்ப்பு காரணமாக 2011 ம் ஆண்டு விஜாய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இணைந்து கொண்டார்.
கடந்த 2018ம் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வெளியிடும் ப்ரோ கபடி போன்ற நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி பெரிய அளவில் பாராட்டப்பட்டார்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிரூத் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பாவனாவின் புகைப்படம் வெளியானது. அனிரூத்-க்கு பெண் வேடமிட்டால் அவர் பாவனா போல் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் தான் பேசியதை அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாவனா. அதில் “அனிரூத் தன்னுடைய சாயலில் தான் இருப்பதாகவும், உண்மையில் இது போன்ற விஷயங்கள் எல்லை தாண்டாத வரை நிச்சயம் ரசிக்கும் வண்ணமே இருக்கும் என்று கூறியுள்ளார்.