வங்கிகளைத் திறக்க அரசாங்கம் அறிவுறுத்தல்

அந்தவகையில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் இதற்காக கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap