விக்ரம் பிரபுவின் அடுத்த பட அப்டேட் . ஒரே படத்தில் கம்பேக் கொடுக்கும் லக்ஷ்மி மேனன் – ஶ்ரீ திவ்யா..!

ஏற்கெனவே லக்ஷ்மி மேனன் ‘கும்கி’யிலும், ஶ்ரீ திவ்யா ‘வெள்ளைக்கார துரை’ திரைப்படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான ஸ்டைலில் நடித்த பல நடிகைகள் தொடக்கத்தில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்துவிட்டு, பிறகு வாப்பில்லாமல், திரையில் காணமலே போயுள்ளனர். அந்த வரிசையில் சுந்தரப்பாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமான லக்‌ஷ்மி மேனன் மற்றும் ஶ்ரீ திவ்யாவும் அடங்குவர்.

நடிகை லக்ஷ்மி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து ‘றெக்க’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது முத்தையா இயக்கத்தில் மீண்டும் கவுதம் மேனனுடன் நடிக்கவுள்ளதாகவும், இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ரீ-எண்ட்ரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஶ்ரீதிவ்யா, கடைசியாக 2017-ல் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் நீண்ட நாட்கள் கழித்து, அதர்வாவின் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படம் இஇந்த ஆண்டின் பாதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லக்ஷ்மி மேனன் மற்றும் ஶ்ரீதிவ்யா இருவருமே விக்ரம் பிரபுவின் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய் சரவணனின் நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க விகரம் பிரபு ஒப்பதமாகியுள்ளார். இயக்குநர் சுசீந்திரனுக்கு சமீபத்தில் நடந்த விபத்து காரனமாக இதன் படப்பிடிப்பு துவங்கப்படாமல் உள்ளது.

இப்படத்தில் நடிப்பதன் மூலம் லக்ஷ்மி மேனன் மற்றும் ஶ்ரீதிவ்யா இருவருக்கும் நல்ல கம்பேக்காக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே லக்ஷ்மி மேனன் ‘கும்கி’யிலும், ஶ்ரீ திவ்யா ‘வெள்ளைக்கார துரை’ திரைப்படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap