பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து சமூகக் களத்திலும் செயல்பட்டு வருகிறார். மருத்துவத் துறையில் நடந்து வரும் முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், அவர் பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான அக்ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவர். சமீபத்தில் அரசியலில் அடியெடுத்து வைப்பதாக திவ்யா அறிவித்திருக்கிறார். அவரைச் சந்தித்து நடத்திய உரையாடல்.…முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக உங்கள் பயணம் எப்படி இருக்கிறது
தமிழ்நாட்டில் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் ஆரோக்கிய மேம்பாடுக்காக, அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன். மருத்துவக் கட்டமைப்பில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரவாயில்லை என்றாலும், அது போதாது. களப்பணிகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்தில் இரண்டு பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. ஐந்து வயதுக் குட்பட்ட 39.4 சதவீதம் குழந்தைகளிடம் போதுமான வளர்ச்சி இல்லை. 12 முதல் 23 மாதங்கள் ஆன 62 சதவீதம் குழந்தை களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் போன்ற இடங்களில் தூய்மையில்லை. போதுமான தலையணை, போர்வை இருப்பதில்லை. மருத்துவர்கள் குழுவோடு இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்தான் இதையெல் லாம் தெரிந்துகொண்டேன். ஈழத்தமிழர் களின் நலன் அப்பாவின் கனவு. அதை நனவாக்க, பல வைட்டமின் ஒர்க்-ஷாப் களை நடத்தி வருகிறேன்.