இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டை விரும்புகின்றனர். அதில் சூதாட்டம் வீரர்கள் தேர்வு என சர்ச்சைகள். ஆனால் ,சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய விளையாட்டு வரலாற்றை ஆழமாகப் பார்த்தால் ஹாக்கி போட்டியில் யாரும் அசைக்க முடியாத அணியாக இந்திய ஹாக்கி அணி விளங்கியது என்பது புலப்படும் . ஒலிம்பிக் தொடரில் எட்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 1928 முதல் 1956 வரை தொடர்ந்து தங்கப் பதக்கங்களைக் குவித்து தனது வலிமையைக் காட்டியது இந்திய அணி. இதன் காரணமாகவே இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என நம்முடைய ஆசிரியர்களால் உணர்ச்சிகரமாக ஹாக்கி சுட்டிக் காட்டப்பட்டது. இந்நிலையில், ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம் எழுதினார்
அதன் பின்னர்தான் ஹாக்கி தேசிய விளையாட்டாக இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. அப்படி அது அறிவிக்கப்பட்டால் இந்தியாவை உலக அளவில் பெரும் பெருமை அடைய செய்த ஹாக்கி வீரர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை ஆக இருக்கும். எதிர் காலத்தில் ஹாக்கியில் திறமை உள்ளவர்களை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும் . இது வரை ஹாக்கி விளையாட்டுதான் தேசிய விளையாட்டு என நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் நவீன் பட்நாயக் எழுதிய கடிதம் அதிர்ச்சி அளித்தது. இதுவரை இந்தியாவின் தேசிய விளையாட்டு இது தான் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவில்லை