கிளிநொச்சியில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கிளிநொச்சி நகரில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன.

கிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குறித்த நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவைச் சந்தை, பேருந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள், வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அதிகளவான மக்கள் நகர்ப் பகுதிகளில் நடமாடியிருந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கிகள் விசிறும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap