முகக்கவச பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளாகாத சாதாரண மக்கள் வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் முகக் கவசம் பயன்படுத்த தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜா சிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீட்டிற்குள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முக கவசம் அணியத்தேவையில்லை எனவும், பயன்படுத்தப்பட்ட முககவசங்களை பல்வேறு இடங்களில் கழற்றி போடுவதனால் நோய் தொற்றும் அளவு அதிகரிக்கும் எனவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என தன்னை தானே சந்தேகிப்பவர்களும், அவர்களுடன் நெருங்கி பழகிய உறவினர்கள், நண்பர்களும், நோயாளர்களை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் சுவாச நோய் குணங்கள் காணப்படும் நபர்களும் முக கவசம் அணிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரண மக்கள் முகக்கவசம் அணியாமை தவறாகும் என சுட்டிக்காட்டி அவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap