வடக்கு மக்களுக்காக சங்கக்கார உட்பட்ட குழுவினர் அளித்த நன்கொடை! அவர் கூறியது என்ன?

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், வட மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்தார்.

பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

எமது நாடு போன்று உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்த COVID-19 வைரஸினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனவே நான், மஹேல ஜயவர்தன, சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியை செய்ய முடியுமாக இருந்தால், அதனை பெரும் பாக்கியமாகக் கருதினோம்.

நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்த போராட்டத்திற்கு கரம் கொடுக்கின்றனர். அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனை தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளை பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டார்.

Share via
Copy link
Powered by Social Snap