கமல் வீட்டில் தனிமைப்படுட்டிருப்பதாக வெளியான பின்னணி என்ன?… பிரபல நடிகையின் பாஸ்போட்டில் ……..

நடிகர் கமல்ஹாசனில் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணி என்ன என்பது குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது.

கமலும் அவரது உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை பிறேக்கிங் செய்தியாக ஊடகங்களில் வெளியானது.

இதற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக அது அகற்றப்பட்டது. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிரபல தமிழ் ஊடகம் விகடன் கமல் தரப்பிடம் கேட்ட போது, கொரோனா குறித்த அரசுகளின் நடவடிக்கைளை அனைவரும் பாராட்ட, கமல் மட்டும்தான் இன்னும் நடவடிக்கைளை துரிதப்படுத்த வேண்டும் என்று அரசை விமர்சிக்கும் விதமாகக் கருத்துகள் தெரிவித்தார்.

இதில் தமிழக அரசின் நடவடிக்கையும் விட்டு வைக்கவில்லை அவர். மேலும் ஒரு கட்டத்தில் தனது அலுவலகத்தையே, மருத்துவமனையாக்க மாற்றுவதற்கு முன்வந்து அரசின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார். இந்த காழ்புணர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. கமலா என்று பெயர் இருந்ததால் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தனிமைப்படுத்தி விட்டதாக மாநகராட்சி ஏ.ஈ நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார்.

பின்பு அவரே நோட்டீஸை அகற்றி இருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கமல் சில ஆண்டுகளாக எம்ஆர்சி நகர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஆழ்வார்பேட்டை வீட்டை தனது அலுவலகமாக மாற்றி பல ஆண்டுகளாக ஆகிறது. அவரது வீடு கூட தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும், அங்கு மக்கள் நீதி மய்யம் அலுவலகம் இருப்பதும் ஊர் அறிந்தது.

எனினும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநகராட்சி வெளியிட்டுள்ள விளக்கத்தில், அதில், கமலின் ஆழ்வார்ப்பேட்டை முகவரியில் தங்கியிருந்த முன்னாள் நடிகை ஒருவர் சமீபத்தில் வெளிநாடு சென்றுவந்துள்ளார். அதனால் அவரை தனிமைப்படுத்துவதற்காக அவர் பாஸ்போர்ட்டில் ஆழ்வார்பேட்டை முகவரி காண்பித்ததால் அங்கு சென்று நோட்டீஸ் ஒட்டினோம். பின்பு தவறுதலாக ஒட்டினோம் என்று தெரிந்தபின்பு நோட்டீஸை அகற்றிவிட்டோம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap